நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு மாற்றி எழுத வேண்டும்: கவர்னர் ஆர்.என். ரவி!

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்.

Update: 2023-01-24 02:26 GMT

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நாம் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும், எவ்வாறு மறக்க முடியும், சுதந்திரம் கிடைத்த பிறகு நம் நாட்டில் நமது சுதந்திரத்தை ஒதுக்கி வைத்தோம். ஆனால் நம் பாரத பிரதமர் 21 பரம் வீர் சக்கர விருது பெற்ற வீரர்களின் பெயரை அந்தமான் நிக்கோபார் தீர்க்க பெயர் சூட்ட இருக்கிறார்.


அது மிகவும் பெருமையான செயலாகும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். நம் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பல்வேறு நபர்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்ததாகவும் கவர்னர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் 200 நபர்கள் பற்றி அவர் தற்போது வரை அறிந்து இருக்கிறார். எல்லா தலைவர்கள் மற்றும் அவர்கள் களத்தில் நின்று போராடிய சுதந்திர போராட்ட குணத்தை அவர் தற்பொழுதும் நினைவு கூர்ந்து இருக்கிறார். நிறைய சுதந்திர போராட்ட வீரர்களைக் கொண்ட ஒரு களமாக தமிழ்நாடு விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


சுதந்திரத்திற்காக போராடிய இந்த ஒரு வீரர்களையும் நம்மால் பறந்து விட முடியாது எளிதாக சுதந்திரம் கிடைத்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு கிடையாது சாதாரண மக்கள் முதல் பல்வேறு நபர்கள் வரை தற்பொழுது சுதந்திரத்திற்கு வரலாற்றை உருவாக்கி இருக்கிறார்கள் என்று அவர் தன்னுடைய உரையை கூறியிருக்கிறார்.

Input & Image courtesy:Maalaimalar

Tags:    

Similar News