கிரேக்க பிரதமர் - மோடி பேச்சுவார்த்தை : கிரீஸ் இந்தியா வர்த்தகத்தை இரட்டிப்பாக்க தீர்மானம்!
கிரேக்க பிரதமர் மற்றும் மோடியின் சந்திப்பில் இரண்டு நாடுகளின் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.;
இந்தியா வந்துள்ள கிரீஸ் பிரதமர் கிரியகோஸ்மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். சந்திப்பில் ராணுவ தளவாடங்களின் கூட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றவும் குடிப்பெயர்ப்பு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவும் இரு நாடுகள் ஒப்புக்கொண்டன. சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி குறிப்பில் கிரீஸ் பிரதமருடன் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் மற்றும் உக்ரைன் போர் உட்பட ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிராக பொதுவான கவலைகளை இரு தரப்பும் பகிர்ந்து கொள்கிறது. இந்த பகுதியில் ஒத்துழைப்பபை மேலும் வலுப்படுத்துவதற்கான விவாதங்கள் நடைபெற்றன. இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-க்குள் இரட்டிப்பாக்க புதிய முன்னெடுப்புகள் குறித்து இரு நாடுகளும் முடிவெடுத்தோம். இன்றைய உலகம் சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு உடனடி மற்றும் திறமையான நடவடிக்கை தேவைப்படுகிறது. அதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கிரியகோஸ் கருதுகிறார் .இந்த பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை காப்பதில் முக்கிய துணாக இந்தியாவை காண்பதாக கிரிய கோஸ் கூறினார். பாதுகாப்பு துறையில் வளமும் இருநாட்டு ஒத்துழைப்பும் ஆழமான பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இத்துறைகளில் பணி குழுக்களை உருவாக்குவதன் மூலம் பொதுவான சவால்களில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும். இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியில் கூட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்த உறவுகளுக்கு நவீன வடிவம் கொடுக்க பல புதிய முன்னெடுப்புகளை சந்திப்பில் அடையாளம் கண்டுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான குடிபெயர்ப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இது நமது இரு நாடுகளின் மக்கள் உறவே மேலும் வலுப்படுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கிரியகோஸ் மிட்சோடாகிஸ் கூறுகையில் ,'இந்தியா உடனானன உத்தி சார்ந்த கூட்டுறவு கிரீசுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது உத்தி சார்ந்த கூட்டுறவு மற்றும் பொருளாதார ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்த விவாதிக்க உள்ளோம்' என்றார்.
SOURCE :Dinamani