தானாக வந்து ஆண்டாள் சிலை மீது அமர்ந்த பச்சைக்கிளி: பக்தர்கள் ஆரவார வழிபாடு!

தானாக வந்த பச்சைக்கிளி ஆண்டாள் சிலை மீது அமர்வதை பக்தர்கள் ஆரவாரத்துடன் வழிபட்டார்கள்.

Update: 2022-12-29 00:53 GMT

கோவை சபரி பாளையம் பால தண்டாயுதபாணி நகரில் பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு பெருமாள் ஆண்டாள் பத்மாவதி போன்ற சிலைகள் உள்ளன. கோவிலில் தினம் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இங்கு வழக்கம். குறிப்பாக இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து போவார்கள். அந்த வகையில் இன்று காலை வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டது.


அப்பொழுது கோவில் பூசாரி பூஜைகள் செய்து சுவாமி சிலைகளை பக்தர்களின் தரிசனத்திற்காக அலங்காரம் செய்து பூஜை செய்து வந்தார். அப்பொழுது ஆண்டாள் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு பச்சைக்கிளி வெளியிலிருந்து பறந்து வந்தது. கோவிலில் இருந்த ஆண்டாள் சிலை தோள் மீது பறந்து வந்த அமர்ந்து அதை கண்டு ஆச்சரியம் அடைந்த பக்தர்கள் சுவாமியை வணங்கினார்கள்.


இந்த செய்தியை தற்பொழுது வேகமாக பரவி வருகிறது. இதை கேட்ட ஊர் மக்களும் தற்பொழுது கோவிலுக்கு படையெடுத்து வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த கிளிக்கு கற்கண்டு வழங்கி இருக்கிறார். அதை அந்த கிளி அழகாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தது. பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது, ஆண்டாள் கிளி வளர்த்து வந்தார் என்பது புராணம். யாருக்கும் பயப்படாமல் கிளி ஆண்டாள் சிலைக்கு அனுபவிக்க பட்டிருந்த பூக்களை கொத்தியது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News