லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றிக் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்..

லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றிக் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்..

Update: 2020-04-15 11:09 GMT

இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக அவதாரம் எடுத்தவர் ஜீ.வி.பிரகாஷ். நடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்த ஜீ.வி.பிரகாஷ் ஒரு கட்டத்தில் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டார். அவரது நெருங்கிய நண்பர்களான இயக்குநர் வெற்றிமாறன், விஜய் அழகப்பன் ஆகியோர் படங்களுக்கு மட்டும் அவ்வப்போது இசையமைத்துக் கொண்டிருந்தார். தனுசுக்கும், ஜீ.வி.பிரகாஷுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' படத்தில் அவருக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணனை இசையமைக்கச் செய்தார் தனுஷ்.

இந்நிலையில் தான் தனுஷ், ஜீ.வி.பிரகாஷின் நலம் விரும்பிகள் இருவரிடம் சமாதானம் பேச, மீண்டும் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்திற்கு இசையமைத்தார் ஜீ.வி.பிரகாஷ். அதன் பின்னணி இசை பெரிதாகப் பேசப்பட அதைப் பாராட்டிய தனுஷ் அடுத்துத் தான் நடிக்கவிருக்கும் கார்த்திக் நரேன் படத்திற்கு இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷை பரிந்துரைத்தார். தயாரிப்பு தரப்பும் அதற்கு ஒப்புக்கொள்ள தற்போது இருவரும் ஸ்கைப் மூலம் பாடலுக்கு மெட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜீ.வி.பிரகாஷ் தான் அடுத்து வெற்றிமாறன் - சூர்யா இனையும் 'வாடிவாசல்' படத்திற்கும் இசையமைக்கிறார். அப்படத்திற்கான இசைப் பணியையும் தற்போது துவங்கியுள்ளதாக ஜீ.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பலரும் லாக்டவுனை குறை கூறிக் கொண்டிருக்க, அதனை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

Similar News