16-வது நிதி குழுவின் தலைவராக மத்திய அரசு நியமனம் செய்தவர் இவர்தான்!
16 வது நிதிக்குழு தலைவராக அரவிந்த் பனகாரியாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்வது குறித்து பரிந்துரை செய்யும் அமைப்பு நிதிக்குழு. தற்போதைய 15- வது நிதிக்குழுவின் பதவிக்காலம் 2025 - 2026 நிதியாண்டு வரை இருக்கிறது. இலையில் நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான அரவிந்த் பனகாரியாவை தலைவராக கொண்டு 16-வது நிதி குழுவை ஜனாதிபதி அமைத்திருப்பதாக மத்திய அரசு தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.
நிதி அமைச்சக இணை செயலாளர் ரித்விக் ரஞ்சனம் பாண்டே நிதிக்குழுவின் செயலாளராக இருப்பார். குழுவின் உறுப்பினர்கள் நியமனம் பற்றி தனியாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 2026 - 2027 நிதி ஆண்டடு முதல் 2030 -2031 நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்துக்கான பரிந்துரைகளை 16வது நிதி குழு அளிக்கும். தனது அறிக்கையை 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
SOURCE :DAILY THANTHI