ஆரோக்கியம் கூடவே அழகு இரண்டையும் ஒன்றாக மேம்படுத்த இதை பயன்படுத்தலாமா ?

Health and beauty maintain with a benefit of amla.

Update: 2021-08-22 23:45 GMT

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமத்தை அழகாக பராமரிக்கவும் நெல்லிக்காய் உதவியாக இருக்கும். நெல்லிக்காயானது ஆயுர்வேதத்தில் அழகு சாதன பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல வகையான சரும நோய்களை சரி செய்யும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. ஆன்டி ஏஜிங், ஆன்டி அக்னி கிரீம்கள் செய்யவதில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் ஒரே தீர்வு நெல்லிக்காயில் இருக்கிறது. 


வயதான தோற்றத்தை குறைக்க கூடிய ப்ரோகொலாஜன் என்ற பொருளின் உற்பத்தியை தூண்டுகிறது. பருக்களினால் ஏற்பட்ட தழும்புகளை குறைக்க நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C உதவும். சோர்வாக தெரியும் சருமத்தை புத்துணர்ச்சியோடு இருக்க செய்ய உதவும் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E நெல்லிக்காயில் உள்ளது. முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை எடுக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ள நெல்லிக்காய் ஆன்டி ஏஜிங் பொருளாக அமைகிறது. 


நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இதன் காரணமாக நெல்லிக்காய் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்பிற்கு நெல்லிக்காய் பயன்படுத்துவது பாரம்பரிய முறையாகும். நெல்லிக்காயை பேஸ் பேக்காக போட்டு வரும் போது நல்ல ஆரோக்கியமான சருமம் பெறலாம். வைட்டமின் C அதிகம் உள்ள நெல்லிக்காய் தெரப்யூட்டிக் தன்மை கொண்டதாக அமைகிறது. இதனால் பருக்களை கொட்ட செய்து முகத்தை அழகாக்குகிறது. நீண்ட காலம் சூரியனில் இருந்து வெளிபடும் UV கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உள்ளது

Input:https://indianexpress.com/article/lifestyle/health/how-to-consume-amla-daily-diet-health-benefits-7170152/

Image courtesy:Indian Express


Tags:    

Similar News