ஆக்சிஜன் ஏற்றத்திற்கு சிறந்த ஆதாரமாக விளங்கும் இது பற்றிய தகவல்கள் !

Health benefits of chikoo.

Update: 2021-08-30 01:19 GMT

சப்போட்டா பழம் ஒரு தனித்துவமான சுவை கொண்டது என்பதால் அது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த பழம் வெறும் நல்ல சுவை கொண்டது மட்டுமல்ல. அதையும் தாண்டி பல்வேறு நன்மைகள் இந்த சப்போட்டா பழத்தில் உண்டு. வைட்டமின்கள் C மற்றும் A நிறைந்தது. ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரம் உடலுக்கு ஆற்றல் வழங்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். செரிமானத்திற்கு உதவும். எலும்புகளுக்கு நல்லது. சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.


இது குறைந்த கொழுப்பு அளவுடன் அதிக கலோரிகளைக் கொண்ட பழம் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளடக்கம் இல்லாதது என்பதால் எடை இழக்க முயற்சி செய்யும் மக்களுக்கு அதிகம் பசி எடுக்காமல் இருக்கவும், முழுமையான திருத்தி உணர்வைத் தரவும் இது ஒரு சிறந்த உணவு. சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க இந்த சப்போட்டா பழம் மிகவும் சரியான ஒன்று.இந்த சப்போட்டா பழம் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் கொண்டதன் காரணமாக குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சினையையேப் போக்கவும், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், உணவுப் பாதையின் வீக்கம், இரைப்பை அழற்சி போன்ற பிற செரிமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த பழம் மிகவும் உதவியாக இருக்கும்.


சப்போட்டா பழத்தினால் சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகப்படியான சப்போட்டா பழம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பழத்தில் இருக்கும் டானின் ஒரு கசப்பான மற்றும் வாயில் விரும்பத்தகாத அரிப்பு உணர்வுகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக நன்கு கனியாத சப்போட்டா பழம் உட்கொண்டால் இது போன்ற பிரச்சினை ஏற்படக்கூடும். கனியாத பழங்களை உட்கொள்வது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். 

Input:https://m.timesofindia.com/life-style/spotlight/five-reasons-to-include-chikoo-in-your-diet/amp_articleshow/67335311.cms

Image courtesy: Times of India


Tags:    

Similar News