தனித்துவமான குணம் கொண்ட இந்த பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Health Benefits of durian

Update: 2021-09-10 23:55 GMT

துரியன் என்பது வெப்பமண்டல பகுதிகளில் இயற்கையாக விளையக்கூடிய, அதிக பழக்கூழ் நிறைந்த ஓவல் வடிவ பழமாகும். இதன் சுவை, கஸ்டர்ட் என்னும் இனிப்பான உணவு வகையின் சுவையை ஒத்தது, என்று மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வாழுகின்ற மக்களால், இதன் சுவைப் போற்றப்படுகிறது. துரியன் பழத்தின் மகத்தான அளவு, நல்ல வாசனை மற்றும் முள் தோல் ஆகியவை, இதனை தனித்துவமாக விளங்கச் செய்கிறது. இது மிகவும் சுவை நிறைந்தது மற்றும் அதிக அளவில் மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள, துரியன் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. 


துரியன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் உடலில் புற்றுநோய் செல்களின் உருவாக்கதைத் தடுக்கிறது. உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடுகள் பலவீனமான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. இது போன்ற சமயங்களில், எலும்புகளை பலப்படுத்த துரியன் பழம் பயனுள்ளதாக அமைகிறது. துரியனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்சத்துகள் உள்ளன. சருமத்தின் வறட்சியைக் குறைப்பதன் மூலம் சருமத்தை மேம்படுத்த இது உதவுகிறது. 


தூக்கம் தொடர்பான செயல்பாடுகளிலும், வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் அத்தியாவசியமான செயல்பாட்டை செய்யும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை துரியன் பழம் கொண்டுள்ளது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு, துரியன் பழம் ஒரு டஸிங் மாத்திரையைப் போல் செயல்படுகிறது. துரியன் பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் உடலில் சேரும் கொழுப்பின் அளவை பராமரிக்கின்றன. இதனால் இதயத்தை பொருத்தமாக வைத்திருக்க முடிகிறது. 

Input & image courtesy: Logintohealth



Tags:    

Similar News