உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய காய்கறியா இது!
Hydration which is Important to our body
பூசணிக்காய் இந்தியாவிலும் சீனாவிலும் மிகவும் பிரபலமான ஒரு காய்கறி ஆகும். பூசணிக்காய் சத்தானதாகவும், குறைவான கலோரிகளே கொண்டிருப்பதாலும் இது மிகவும் ஆரோக்கியமான காய்கறி ஆகும். இதில் உடலுக்கு நன்மைத் தரக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிக நீர்ச்சத்து உள்ளது என்பதால் ஜூஸ், சாலடுகள் போன்ற பல உணவுகளில் சேர்த்து எடுத்துக்கொள்ள ஏற்றது.
சாம்பல் பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த சாம்பல் பூசணி இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீசு மற்றும் நியாசின், தியாமின், வைட்டமின் C மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் உள்ளது. இதில் டானின்கள், பினோல்கள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்து உள்ளது.
பாரம்பரிய ஆயுர்வேதத்தின்படி, சாம்பல் பூசணி நமது மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் நினைவாற்றலை கூர்மைப்படுத்தி அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சாம்பல் பூசணிக்காயில் ஃபோலேட் உள்ளது. இது பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கிறது. கூடுதலாக, இந்த காய்கறி நம் மனதையும், மூளையையும் தளர்த்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சாம்பல் பூசணி சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்கது. பூசணி உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
Image courtesy: Indian Express