உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த தேநீரின் சிறப்புகள் !
Health Benefits of Hibiscus Tea.
செம்பருத்தி இனி அழகுக்காக மட்டுமல்ல உடல் நலத்திற்கும் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக செம்பருத்தி மலர்களில் தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நன்மைகளை கொண்டது. இந்த தேநீர் அருந்துவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். உடலில் உள்ள LDL கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைத் தடுக்க இந்த தேநீர் மிகவும் நன்மை பயக்கும். இரத்தச் சர்க்கரையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைத் தடுக்கவும், ஹைப்போகிளைசிமிக் மற்றும் ஹைப்போலிபிடெமிக் பண்புகளை கொண்டுள்ளது.
செரிமானத்தை சிறப்பாக செயல்படுத்தும், எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் மனச்சோர்வை நீக்க மருந்தாக செயல்படும். கொலஸ்ட்ராலை குறைக்கும். கல்லீரல் சேதத்தைத் தடுக்கும். மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் கொண்டது. செரிமானத்தை மேம்படுத்தும். இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கும். பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது. புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும். சருமத்திற்கு இளமையான பொலிவைக் கொடுக்கும். செம்பருத்தி உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த அழுத்தத்தை மிகவும் திறம்பட குறைக்கிறது.
செம்பருத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. செம்பருத்தியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் பாதிப்பை தடுக்கவும், வயதான அறிகுறிகளை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் C காரணமாக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. செம்பருத்தி தேயிலை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image courtesy:times of India