நீரிழிவு நோய்க்கும், நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

Health benefits of kattuyanam rice.

Update: 2021-08-13 00:00 GMT

பாரம்பரிய முறைப்படி விளைவிக்கப்படும் பொருட்களுக்கு பல நன்மைகள் இருக்கும், ஆனால் அது இன்றைய காலகட்டங்களில் மறக்கப்பட்டு விட்டன. குறிப்பாக விவசாயத்தில் பல பாரம்பரிய நெல் வகைகள் தற்பொழுது குறைந்து கொண்டு வருகின்றன என்று கூட கூறலாம். பாரம்பரிய அரிசி வகைகளில் நீங்கள் நினைத்தும்கூட பார்த்திராத பல பல அற்புதமான நன்மைகள் குவிந்து கிடக்கிறது. அப்படி நாம் பயன்படுத்த தவிறிய ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி தான் காட்டுயானம். இந்த நெல்லின் கதிர் கிட்டத்தட்ட ஏழு அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்த காட்டுயானம் பயிரை பயிரிட்ட வயலில் ஒரு காட்டு யானை நுழைந்து கொண்டால் அதைக்கூட கண்டுபிடிக்க முடியாதாம். ஆதலால் தான் இந்த அரிசிக்கு காட்டுயானம் என்ற பெயர் வந்துள்ளது.


நீரிழிவு நோய் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பல நோய்கள் வந்து விடும். மேலும் உடல் எடைக்கூடினால் இதயம் சம்பந்தமான நோய்களும் ஏற்படக்கூடும். இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். எனவே சர்க்கரை நோய்க்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அரிசிக்கு கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. அதற்குத் தீர்வாக காட்டுயானம் அரிசியை சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது என்று சொல்லப்படுகிறது. மெதுவாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு அரிசி வகை இது. இது நம் உடலின் இரத்தத்தில் ஈசியாக கலந்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. மேலும் பசியை அதிகரிப்பதன் மூலம் அதிக உணவு உட்கொள்ளலுக்கு தூண்டச் செய்து நம் உடல் எடை அதிகரிக்கவும் காரணமாக அமைகிறது.


210 நாட்கள் வரை விளைவிக்கப்படும் இந்த அரிசியை பல விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து மக்களுக்கு தருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும், நம் உடல் நலத்திற்காகவும் கண்டிப்பாக நாம் வாங்கி சாப்பிட வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசி ஒரு அற்புதமான மாமருந்து. எனவே இதய நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த அரசு ஒரு மாற்று மருந்து என்று கூட கூறலாம்.

Input: https://www.newindianexpress.com/cities/chennai/2020/dec/16/going-thered-rice-way-2236800.html

Image courtesy: indian express

Tags:    

Similar News