இதை ஒரு டம்ளர் பருகுவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றங்கள் !

Health benefits of beetroot juice.

Update: 2021-11-20 00:30 GMT

நல்ல உணவுப் பழக்கம் என்று வரும் போதெல்லாம், ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். மேலும் பழச்சாறுகள் குடிப்பதற்கு எதிராக நிபுணர்கள் அடிக்கடி ஆலோசனை கூறுகிறார்கள். இருப்பினும், ஒரு புதிய ஆய்வின்படி, பீட்ரூட் சாறு குடிப்பது, சிறந்த இரத்த நாளங்கள் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட வாய்வழி பாக்டீரியாக்களின் கலவையை ஊக்குவிக்கிறது. உடல் பலவீனமானவர்கள் பீட்ரூட் சாறு குடிப்பது நன்மை பயக்கும் என்றும் பல மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 


பீட்ரூட், கீரை மற்றும் செலரி போன்ற பிற உணவுகளில் கனிம நைட்ரேட் அதிகமாக உள்ளது. பல வாய்வழி பாக்டீரியாக்கள் நைட்ரேட்டை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுவதில் பங்கு வகிக்கின்றன. இது இரத்தத்தை சீராக்க உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, வயதானவர்கள் குறைவான நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்கிறார்கள். இது மோசமான வாஸ்குலர் அதாவது இரத்த நாளங்கள் மற்றும் அறிவாற்றல் அதாவது மூளை ஆரோக்கியத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.


ஆரோக்கியமான வாய்வழி நுண்ணுயிரியின் நீண்ட கால பராமரிப்பு, வயதானவுடன் வரும் தீங்கு விளைவிக்கும் வாஸ்குலர் மற்றும் அறிவாற்றல் மாற்றங்களை தாமதப்படுத்த உதவும். மேலும் அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் பருகுவதில் கிடைக்கும் ஏராள நன்மைகள் உங்களுடைய உடலுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்றது. எனவே வாரத்தில் ஒரு முறையாவது உங்கள் உணவு பட்டியலில் பீட்ரூட் ஜூஸ் இடம் பெறுவது நல்லது. 

Input & Image courtesy:Times of India



Tags:    

Similar News