மூளை செயல்பாட்டை அதிகரிக்கும் இதை சாப்பிட சரியான நேரம் இதுதான்!

Health benefits of eating almonds.

Update: 2021-10-13 00:45 GMT

பாதாம் என்பது வைட்டமின் E மற்றும் மெக்னீசியம் போன்ற, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அற்புதமான பருப்பு வகையாகும். இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை அனைத்தும் உடலை பலப்படுத்தவும், மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. பாதாம் குறைந்த அளவிலேயே கலோரிகளைக் கொண்டுள்ளது. எனினும் இதனை சரியான அளவிலேயே உட்கொள்ள வேண்டும். மேலும், உடலில் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க பாதாம் உதவுகிறது.  


பாதாம் மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பாதாம் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாதாம் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. நகங்களில் உண்டாகும் எந்தவொரு காயத்தையும் குணப்படுத்த பாதாம் பயனுள்ளதாக இருக்கிறது. தினசரி, பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் உதடுகளை பராமரிக்க முடிகிறது. பூராண் கடித்ததினால் உண்டாகும் தடிப்பு வலிக்கு பாதாம் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது. பாதாம் மற்றும் கடுகு எண்ணெயின் கலவையைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் கடுமையான தலைவலியிலிருந்து நிவாரணண் பெற பயனுள்ளதாக இருக்கிறது.


சோர்வு மற்றும் பலவீனத்தை குணப்படுத்த, பாதாம் பருப்புடன் குங்குமப்பூ, ஜாதிக்காய், ஏலக்காய், சர்க்கரை, கிராம்பு, நெய் ஆகியவைச் சேர்த்து சாப்பிடுங்கள். தினசரி, பாதாம் பருப்பு உட்கொள்வது முதுகுவலியைக் குறைக்கிறது. சரியான நேரத்தில் நல்ல அளவில் உட்கொள்ளும் போது, பாதாம் பயனுள்ளதாக அமைகிறது. பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து உட்கொள்ளும் போது, அவை இன்னும் ஆரோக்கியமாக மாறுகிறது. இந்த வழியில் பாதாமை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு தேவையான அனைத்து புரதங்களையும் பெற முடியும். நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பாதாம் பருப்பு உட்கொள்வது வயிற்றின் வெப்பநிலையை பராமரிக்கிறது மற்றும் இரைப்பை பிரச்சினைகளைத் தடுக்கிறது. பாதாமை சுமார் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது, பாதாம் பருப்பு முளைகட்டுகிறது. இந்த முளைக்கடிய பாதாமை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் போது, பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.  

Input & Image courtesy:Logintohealth

 


Tags:    

Similar News