தினமும் பயன்படுத்தும் இந்த சமையல் பொருளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
Health benefits of tomatoes
சமையலில் புளிப்பு சுவைக்காக தக்காளி அதிகமாக சேர்க்க படுகிறது. தக்காளியை சமைத்ததைத் தவிர பச்சையாகவும் சாப்பிடலாம். தக்காளி பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. பெரும்பாலான பெண்கள் பச்சையாக தக்காளி சாப்பிடுவது அவர்களுடைய முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதாக கருதுகிறார்கள். இருப்பினும், தக்காளியை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு நாம் எப்போதும் அதனை சரியாகக் கழுவ வேண்டும். தக்காளியில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், குரோமியம், கோலின், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கும். இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
நீண்ட காலத்திற்கு இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதால், பல்வேறு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குரோமியம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுவதால் தக்காளி அதற்கு ஒரு நல்ல தேர்வாகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளியை பச்சையாக சாப்பிடுவது எலும்புகளுக்கு நல்லது. தக்காளியில் உள்ள வைட்டமின் K, கால்சியம் மற்றும் லைகோபீன் ஆகியவை எலும்புகளை சரிசெய்யவும், பலப்படுத்தவும், எலும்பு நிறை அதிகரிக்கவும் மிகவும் நல்லது. தக்காளி சாறு குடிப்பதால் செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் இருப்பை கணிசமாக அதிகரிக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தக்காளியின் தோலுடன் எப்போதும் தக்காளியை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில் தக்காளியின் தோலில் நம் உடலுக்குத் தேவையான பைட்டோ கெமிக்கல்கள் அதிகம். தக்காளியை உரித்து, தோலை முகத்தில் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள லைகோபீன் முகத்தை சுத்தப்படுத்தி, சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்கிறது. தக்காளியில் வைட்டமின் A இருப்பது முடிக்கு நல்லது. இது நமது தலைமுடியை வெளிப்புற பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
Input & Image courtesy:Healthline