மனச் சோர்வை போக்கி புத்துணர்ச்சி தரும் மிளகுக்கீரை எண்ணெய் பற்றிய குறிப்புகள் !
Health Benefits of Peppermint oil.
மிளகுக்கீரையில் பல ஊட்டச்சத்து கூறுகளும் தாதுக்களும் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபைபர்கள், கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் C, இரும்பு போன்றவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பன. மிளகுக்கீரை எண்ணெயில் நல்ல அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனளிக்கிறது.
மிளகுக்கீரை எண்ணெயில் இரத்த சுத்திகரிப்பு பண்புகள் உள்ளது. மேலும் இது இரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. மிளகுக்கீரை எண்ணெய் வளர்சிதை மாற்றத்திலும் உதவுகிறது. மேலும் இது அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. பணிச்சுமை அல்லது குடும்ப பிரச்சினைகள் போன்ற காரணங்களால் மனச்சோர்வு உண்டாகும் இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். நம் உடலின் நன்மைக்காக மனதை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும். மிளகுக்கீரை எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
மிளகுக்கீரை எண்ணெயின் சில துளிகளை தண்ணீரில் இட்டு குளிப்பதன் மூலம் மனச்சோர்வு குறைந்து புத்துணர்ச்சியாக உணர முடிகிறது. மிளகுக்கீரை எண்ணெய் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இதனால் அஜீரண கோளாறு குறைக்கிறது. சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயை சேர்த்த தண்ணீரைக் குடிப்பதால் வயிற்றில் உண்டாகும் பிரச்சினைகள் அனைத்தும் குணமாகத் தொடங்குகின்றன. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபைபர்கள் வாயுவு சிக்கலை சரிசெய்ய உதவுகிறது. பசியின்மை உள்ளவர்களுக்கு மிளகுக்கீரை எண்ணெய் ஒரு மருந்தாக செயல்படுகிறது. இந்த எண்ணெய் வாந்தி, வெளியேற்றம், வயிற்று வலி மற்றும் மார்பு வலியை குணப்படுத்த உதவுகிறது.
Input & image courtesy:logintohealth