நகர்ப்புற மக்களுக்கு இதுவரை தெரிந்திருக்க முடியாத இதன் நன்மைகள் !
Health benefits of sodakku thakkali.
நகர்ப்புறங்களில் வாழும் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா? என்பதே தெரியாது. தக்காளி கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன சொடக்கு தக்காளி? என்று தானே யோசிக்கிறீர்கள். இதுவும் ஒரு வகை தக்காளி தான். இது செடியில் இருந்து பறித்து அதை அழுத்தம் பொழுது சொடக்கு என்று சத்தம் கேட்கும். அதனால்தான் இதற்கு சொடக்கு தக்காளி என்ற பெயர் வந்தது. எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காத இந்த சொடக்கு தக்காளியில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து சரும கட்டியின் மேல் பத்து போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீங்கிவிடும்.
இந்தச் சொடக்குத் தக்காளி செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு நல்ல தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டுவலியால் அவதிப்படும் வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். குறிப்பாக உடல் பலவீனவர்களுக்கு தேவையான சக்தியை இது வழங்குகிறது.
இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது என்றும் சில மருத்துவ குறிப்புகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் சாப்பிடும் அதிக உணவுகள் கூட ஜீரணம் ஆகவேண்டுமென்றால் இந்தப் பழத்தைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை எளிதாக்குகிறது.
Input: https://www.vikatan.com/health/healthy/134809-benefits-of-cape-gooseberry
Image courtesy:vikatan