வாத நோய்க்கு இயற்கையாக தீர்வு காண இதை கட்டாயம் பயன்படுத்தவும் !

Health benefits of Tulasi Seeragasamba.

Update: 2021-08-21 00:22 GMT

முன்னோர்கள் எல்லாம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார். ஆரோக்கியத்திற்கான இரகசியம் என்ன என்று ஆராய்ந்த போது அதில் அவர்கள் சாப்பிட்டு வந்த உணவு வகைகளும் ஒரு காரணமாக இருந்துள்ளன. இதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்கள் உண்டு வந்த பாரம்பரிய அரிசி. பல வகையான சீரகச் சம்பா அரிசியில் மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒன்று தான் வாசனை சீரகச் சம்பா. அதன் நெற்பயிரே ஒரு பெரிய கடுகு அளவில் தான் இருக்கும். பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியில் கருந்துளசியில் இருப்பதைப் போலவே ஒரு கருப்பு கோடு இருக்கும். 


இந்த துளசி வாசனை சீரகச் சம்பா அரிசி நன்றாக விளைந்து பூக்கும் தருணத்தில் நாம் வயலுக்கு சென்று பார்க்கும் போது வயலில் ஒரு அற்புதமான வாசனை வீசுமாம். இதன் காரணமாக தான் இதற்கு துளசி வாசனை கொண்ட சீரக சம்பா என்று பெயர் வந்தது. இது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஒரு வகை அரிசியாகும். இதனை சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். உடல் மெலிந்து காணப்படுபவர்கள் இந்த துளசி வாசனை சீரகச் சம்பா அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல புஷ்டியாக இருக்கும்.


பல நன்மைகளை தன்னுள்ளே கொண்ட இது இயற்கையான முறையில் கிடைக்கும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. அதே போல இது நல்ல மகசூலை கொடுக்கக்கூடிய ஒரு நெல் இரகம். காட்டுயானம் நெற்பயிரைப் போலவே நன்கு உயரமாக வளரும். இரைப்பை கோளாறுகளை சரி செய்யும் தன்மை துளசி வாசனை சீரகச் சம்பா அரிசிக்கு இருக்கிறது. அதே போல வாத நோயின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். 

Input:https://m.timesofindia.com/life-style/health-fitness/diet/benefits-of-different-types-of-indian-rice/amp_articleshow/21480825.cms

Image courtesy:Times of India 


  


Tags:    

Similar News