பொட்டாசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் !
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பம்பளிமாஸ் பழம்.
பம்பளிமாஸ் பழம் எண்ணற்ற பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. வயதானோருக்கும் இளைஞர்களுக்கும் அவ்வப்போது கால், கை, அல்லது அல்லைகளில் தசைகள் இறுக்க பிடித்துக்கொள்ளும். ஆனால், இதற்கு ஒரு பழம் தீர்வாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை தான். பம்பளிமாஸ் பழம் தான் அந்த மருத்துவ குணம் நிறைந்த பழம். இந்த தசைப்பிடிப்புக்கு மட்டுமல்லாமல் இரத்த அழுத்தம், நோயெதிர்ப்பு ஆற்றல் போன்ற வேறு சில பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியது. பம்பளிமாஸ் பழம் பொட்டாசியம் சத்துக்களின் சிறந்த ஆதாரம் ஆகும். ஒவ்வொரு பழமும் தினசரி பொட்டாசியம் தேவையில் 37% வழங்குகிறது.
பொட்டாசியம் வாசோடைலேட்டராகவும் செயல்படுகிறது என்பதால் இது இரத்த நாளங்களில் பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளின் ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவிக்கிறது. இது இதயத்தில் அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் உங்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும். இதன் முக்கியமான மருத்துவ குணம் என்றால் உடலில் ஏற்படும் தசைப்பிடிப்புகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.
நம் உடலில் தசைப்பிடிப்பு முக்கிய காரணமாக இருக்கும் திரவத்தை சமநிலைப்படுத்துவதற்கு பொட்டாசியம் சத்து இன்றியமையாதது. முக்கியமாக பொட்டாசியம் பற்றாக்குறையின் காரணமாகவே பிடிப்புகள், தசைநார்கள் கிழிதல், தசைகள் சிதைவு போன்ற பிரச்சினை எல்லாம் ஏற்படக்கூடும். பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளில் சிறந்து விளங்கும் பம்பளிமாஸ் பழம் அதன் பற்றாக்குறைகளை எல்லாம் போக்கி தசைப்பிடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.
Input: https://www.healthline.com/nutrition/pomelo-fruit
Image courtesy: wikipedia