பெண்களுக்கு அதிகமாக நன்மைகளை பயக்கும் சிறுதானியம் !

பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் சிறுதானியங்களில் ஒன்றாக கம்பு திகழ்கிறது.

Update: 2021-08-14 00:00 GMT

சிறுதானியங்கள் நன்மைகளை பற்றி கொஞ்சமாக மக்களுக்கு தெரிய வரும் காரணத்தால் மக்களிடையே அதிகளவில் அவை பிரபலமாகி வருகின்றன. அப்படி சிறுதானியங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் கம்பு. குறிப்பாக இதில் உள்ள பல ஆரோக்கிய நன்மைகள் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பல குணங்கள் நிறைந்த கம்பு இந்தியாவில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கம்பு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து  பார்க்கலாம்.


இயற்கையின் வரமாக கிடைத்துள்ள கம்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள கரையாத நார்ச்சத்து செரிமானம், சரியான வளர்சிதை மாற்றம், உடலில் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க, நீரிழிவு இல்லாதவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.


கம்பு இயற்கையாகவே பசையம் இல்லாத புரதங்களால் நிறைந்துள்ளது. இது இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு அத்தியாவசியமான குறைந்த அளவு அமினோ அமிலம் மற்றும் அதிக நல்ல கொழுப்பு உள்ளடக்கம், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான 75% நல்ல கொழுப்புகள், தினைகளில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு போன்ற நன்மைகளைக் கொண்டிருப்பதன் காரணமாக நீரிழிவு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கம்பு ஒரு மாமருந்தாக பார்க்கப்படுகிறது. கம்பு தானியத்தில் உள்ள கரையாத நார்ச்சத்து குளுக்கோஸ் மற்றும் சர்க்கரையை இரத்த ஓட்டத்தில் மெதுவாக வெளியேற்ற உதவுகிறது.

Input: https://www.theanilgroup.com/miracle-millet-kambu-its-health-benefits.

Image courtesy: wikipedia



Tags:    

Similar News