G20 அமைப்பின் முதலாவது சுகாதார பணிக்குழு கூட்டம்: இதன் சிறப்பம்சம் என்னவென்று தெரியுமா?
முதலாவது G20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18 முதல் நடைபெறுகிறது.
G20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் முதலாவது G20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது. G20 இந்தியா தலைமைத்துவத்தின் சுகாதார அமைப்பு நான்கு சுகாதார பணிக்குழுக் கூட்டங்கள், சுகாதார அமைச்சர்கள் நிலையிலான ஒரு கூட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் திருவனந்தபுரம் , கோவா, ஹைதராபாத், காந்திநகர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.
குறிப்பாக இந்த ஒரு சுகாதார பணி குழு கூட்டத்தில் முக்கிய நோக்கம் என்னவென்றால், மருத்துவ பயணம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம், மருந்துகளின் கூட்டு ஆராய்ச்சி குறித்த பயிலரங்கு, நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசிகள், பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம் ஆகியவை குறித்து விவாதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2023, ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெற உள்ள முதலாவது சுகாதாரப் பணிக்குழுக் கூட்டத்திற்கு இடையே மருத்துவப் பயணம் குறித்த கூட்டம் நடைபெற உள்ளது.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் G20 இந்தியத் தலைவர் பதவி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், செயல் சார்ந்ததாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் வெளியிடப்பட்ட கருப்பொருள் தான் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்' என்பது இந்தியாவின் 'உலகம் ஒரு குடும்பம்' என்ற தத்துவத்தை விளக்குகிறது. தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆரோக்கியமான உலகைக் கட்டியெழுப்புவதற்கு கூட்டாகச் செயல்பட உலகிற்கு இது ஒரு தெளிவான அழைப்பு இது. நோய் தொற்று பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது.
Input & Image courtesy: PIB News