இதை சேர்ப்பதால் என்னென்ன அற்புதமெல்லாம் நடக்கும் தெரியுமா?

Healthcare benefits of coriander.

Update: 2021-08-03 13:43 GMT

கொத்தமல்லி தழை, விதைகள் இரண்டுமே பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இரண்டுமே பாரம்பரியமாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொத்தமல்லி இலைகள் அனைத்து வகையான உணவுகளிலும் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல கொத்தமல்லி சட்னி, துவையல் எல்லாம் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி தழை உணவு நார்ச்சத்து, மாங்கனீசு, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் அற்புதமான ஆதாரமாக விளங்குகிறது.


செரிமான அமைப்பு சீராக செயல்பட இது ஒரு சிறந்த உணவு, கொத்தமல்லி கல்லீரல் செயல்பாடுகளையும் குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு கொத்தமல்லி இலை மிகவும் நல்லது. இது இன்சுலின் சுரப்பைத் தூண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் வல்லமைப் பெற்றது. இதில் உள்ள வைட்டமின் K அல்சைமர் நோய்க்கு சிகிச்சையளிக்க ஏற்றது. கொத்தமல்லியில் இருக்கும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்- வைட்டமின் A, நுரையீரல் மற்றும் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.


கொத்தமல்லியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனால் கீல்வாதம் போன்ற அழற்சி நோய்களுக்கு எதிராக போராடவும் இது மிகவும் நல்லது. கொத்தமல்லியின் ஆன்டி-செப்டிக் பண்புகள் வாய் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன. கொத்தமல்லி கண்களுக்கு நல்லது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் நோய்களைத் தடுக்கிறது. கான்ஜுன்க்டிவிடிஸ் எனும் வெண்படல அழற்சி எனப்படும் கண்ணில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்க இது மிகவும் ஏற்ற ஒன்றாக உள்ளது.

Input: https://news.abplive.com/health/benefits-of-coriander-leaves-know-hidden-properties-of-common-kitchen-ingredient-in-improving-health-1473021

Image courtesy: wikipedia 


Tags:    

Similar News