நெல் வகைகளில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இதனின் குணாதிசயங்கள் !
கருடன் சம்பா அரிசியின் நன்மைகள்.
தமிழர்களின் பாரம்பரியமான நெல் வகைகளில் இதுவும் ஒன்று. உணவுக்காக தேர்ந்தெடுக்கப்படும் அரிசி வகைகளில் கருடன் சம்பா ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. கருடன் சம்பா அரிசிக்கு இந்த பெயர் வருவதற்கு ஒரு காரணம் உண்டு. கருடனுக்கு அதாவது கழுகுக்கு கழுத்தில் வெள்ளையாக வளையம் இருப்பது போல கருடன் சம்பா நெல்லின் நுனி பகுதி வெள்ளையாக இருக்கும். இதனால் தான் இந்த வகை நெல் கருடன் சம்பா என்று பெயர் பெற்றது. இயற்கை பேரழிவுகளான வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வாழக்கூடிய தன்மை இந்த நெல்லுக்கு இருக்கிறது.
கருடன் சம்பா அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை வைத்து ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை சமைக்கலாம். இந்த அரிசி இரகத்தில் பசையம் குறைவாக இருக்கும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடல் வலிமை பெறும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்றது. உடலில் உள்ள கட்டிகளை கரைக்கும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு. இது அதிக நார்ச்சத்து நிறைந்தது. இரத்த சக்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் ஆற்றல் மிக்கது.நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்தது.
எலும்புகளை வலுவூட்ட மற்றும் இரத்த சோகை பிரச்சினையைப் இரும்புச் சத்து நிறைந்தது. வைட்டமின், தாதுக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தது. எடையிழக்க விரும்பும் மக்கள் கண்டிப்பாக இந்த அரிசியை சாப்பிடலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். மேலும், உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
Input: https://www.newindianexpress.com/cities/chennai/2020/dec/16/going-thered-rice-way-2236800.html
Image courtesy:indian express