பல்வேறு சத்தான கூறுகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள உணவு !

சோளத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன அவற்றின் நன்மைகளும் மற்றும் பக்க விளைவுகளையும்.

Update: 2021-08-26 01:30 GMT

சோளத்தில் வைட்டமின் B,C மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில், அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. சோளத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோளத்தை உட்கொள்ள வேண்டும். சோளத்தில் நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன. 


இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. சோளத்தில் வைட்டமின் A மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தக்க அளவில் உட்கொள்ள வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து எண்ணெய்களிலும் பைட்டோஸ்டெரால்கள் இயற்கையாகவே உள்ளன. எனினும், சோள எண்ணெயில் மற்ற எண்ணெய்களை விட அதிக அளவில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. பைட்டோஸ்டெரால்ஸ் சீரம் உடலில் சேரும் கொழுப்பின் செறிவைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


எனினும், இதன் பயன்பாடு அதிகரிக்கும் போது, இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை, சோளத்தை அதிகமாக உட்கொள்வது சருமத்தில் ஒவ்வாமை மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது. சோளம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் சோளம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பச்சை சோளத்தை குழந்தைகள் உட்கொள்ள கூடாது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தும்.  

Input:https://m.timesofindia.com/life-style/food-news/not-just-delicious-corn-is-also-loaded-with-health-benefits/amp_etphotostory/67882552.cms

Image courtesy:times of India


Tags:    

Similar News