மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இந்த வியாதி மிகப்பெரிய பிரச்சினை !

தூக்கத்தில் பேசும் வியாதி பற்றி முக்கியமான தகவல்கள்.

Update: 2021-08-27 01:27 GMT

தூக்கமின்மை சிக்கலைக் குறித்து நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். எனினும் தூக்கத்தில் உளருவது குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பெரும்பான்மையான மக்கள், தூங்கும்போது பேசும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது, ஒரு வகை தூக்கம் தொடர்பானக் கோளாறாகும், இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம் அறியப்படவில்லை. ஏதேனும் மூளை தொடர்பான சிக்கல்களின் காரணமாக, இந்த சிக்கல் எழுகின்றது என நம்பப்படுகிறது. தூங்கும்போது பேசும் நபருக்கு எழுந்தபின் அவர் என்ன பேசினார் என்பது நினைவில் இருப்பதில்லை. 


ஒரு நபர் பகலில் கவனிக்கும் விஷயங்களை தூக்கத்தில் உணர்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இதுபோன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட நபருக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இது தீவிர மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்கள் எனவே ஆரம்ப கட்டத்திலேயே இதற்காக சிகிச்சை களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். 


தூக்கம் தொடர்பானக் கோளாறு மற்றும் தூக்கத்தில் பேசுவது என்றால் என்ன என்பது குறித்து மேலும் சில முக்கிய தகவல்களை அறிந்து கொள்வோம். ஒருவர் தூக்கத்தில் பேசுவதற்கு என்ன காரணம், தூக்கம் தொடர்பான கோளாறுகள் முக்கியமாக மூளை வியாதிகளால் ஏற்படுகின்றன என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். குழப்பம் இரவில் தூக்கத்தில் பேசுவதற்கான அறிகுறியாகும். இந்த சிக்கலைத் தவிர்க்க சில வழிகள் பின்பற்றப்பட வேண்டும். அவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும். நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும். உடல் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். 

Input:https://hellogiggles.com/lifestyle/health-fitness/sleep-talking/

Image courtesy:wikipedia


Tags:    

Similar News