தெளிவான குரலைப் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் !

How to clean the throat?

Update: 2021-09-01 01:18 GMT

தொண்டையை எதற்காக சுத்தம் செய்ய வேண்டும்? சுத்தமான தொண்டையுடன் இனிமையான மற்றும் தெளிவான குரலை பராமரிக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். தொண்டை சுத்தமாக இருந்தால் குரல் தெளிவாகிறது. தொண்டை உடலின் மிக முக்கியமான பகுதியாகும். பல வகையான இன்னல்களைத் தடுக்க நாம் அனைவரும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். தொண்டை தொடர்பான பிரச்சினைகள் உண்டானால் பேசுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொண்டையில் புண் மற்றும் சளி உருவாகிறது. மேலும், கீழ் சுவாசக் குழாயில் இருமல் ஏற்படுகின்றது. ஒரு நபர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தால் இருமல் உருவாகிறது. சில சமயங்களில் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கும் இருமல் உருவாகிறது. தொண்டையை சுத்திகரிக்கும் முறை என்பது, உறுப்புகளை பாதுகாக்கும் ஒரு வகையான செயல்முறையாகும். இது தொண்டையில் உண்டாகும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது. 


தொண்டையை சுத்தம் செய்ய சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. தொண்டை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதாலும் தொண்டை பாதிப்பைத் தடுப்பதாலும் இவை நன்மை பயக்கிறது. தொண்டையை பராமரிக்க வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். கபம் மற்றும் தொற்றுநோயை அகற்றவும் இது பயன்படுகிறது. இது குரலை மேம்படுத்துகிறது. மேலும், சூடான நீர் மற்றும் சூடான சூப் போன்ற பிற சூடான திரவங்களை குடித்த பிறகு இருமல் வெளியே வரத் தொடங்குகிறது. தொண்டையில் வலி இருந்தால் சூடான திரவங்களை குடிக்கவும். 


பெரும்பாலும் குளிர்காலத்தில், மக்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இது தொண்டையை சுத்திகரிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து, அந்த நீரைக் கொண்டு கொப்புளிக்கவும். சரியான அளவில் உப்பை உபயோகிக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான உப்பு தொண்டையை வறட்சி செய்யக்கூடும். மக்கள் அனைவரும் குளிர்காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வானிலை மாற்றங்கள் காரணமாக ஒவ்வாமை மற்றும் தொண்டையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், தொண்டை வலி இருந்தால் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். 

Input:https://www.newindianexpress.com/states/kerala/2021/aug/21/voice-change-post-covid-recovery-battered-vocal-cords-to-blame-2347596.html

Image courtesy:Indian Express


Tags:    

Similar News