உலகில் மிக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக இதுவும் திகழ்கிறது !

Healthy benefits and side effects of Apricot

Update: 2021-09-08 01:37 GMT

உலகின் மிக ஆரோக்கியமான பழங்களில் பாதாமி பழமும் ஒன்றாகும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு–காஷ்மீரில் பரவலாக பயிரிடப்படும் ஆப்ரிகாட் உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான பல நன்மைகளை பயக்கிறது. பாதாமி பழம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. மென்மையான தோல் கொண்டது. பாதாமி மரம் 7 முதல் 10 மீட்டர் உயரம் கொண்டதாகும். பாதாமி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை, பிற பழங்களை உட்கொள்வது போல பச்சையாகவே சாப்பிடலாம். இவை ஜாம் தயாரிக்கவும் பயன்படுகிறது.  


இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன. பாதாமி பழம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பாதாமி எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் தோல் தொடர்பான நோய்களைத் தடுக்க முடிகிறது. பாதாமி பழத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே இதற்கு முக்கிய காரணமாகும். பாதாமி பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நோய்களைத் தடுக்கிறது. பாதாமி பழத்தில் இரும்பு மற்றும் தாமிரம் ஆகிய கூறுகள் உள்ளன. இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இரத்தத்தில் அதிக சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் சோர்வு, பலவீனத்தை குறைக்கிறது. பாதாமி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. 


பாதாமி பழங்களை அதிகமாக உட்கொள்ளும் போது, இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறன. அவை, பாதாமி பழத்தை உட்கொள்வதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், இது தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பாதாமி பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், பாதாமி பழம் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைகிறது. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாமி பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கிறது.பாதாமி விதைகளில் சயனைடு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால்,பாதாமி பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. நாள் ஒன்றுக்கு 30 பாதாமி விதைகளுக்கு மேல் உட்கொள்ள கூடாது.   

Input:Log In To health

Image courtesy:wikipedia


Tags:    

Similar News