இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு துணைபுரியும் துணைவன் !
Healthy Benefits and side effects of bajra Millet
தினை என்பது ஒரு வகை தானியமாகும். இது முதன் முதலில் விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டது. எனினும், தினையின் ஊட்டச்சத்து குணங்களைப் பற்றி அறிந்த பின்னர், மக்கள் இதனைத் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். தினை பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலும் மக்கள், தினை ரொட்டியைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஏனெனில், இது உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினை, ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சத்தான உணவாகும். இதில், நல்ல அளவில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் ஒரு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் இந்த நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம், இவர்களின் உணவில் நார்ச்சத்து இல்லாததே ஆகும். கொழுப்பின் அதிகரிப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இதன் விளைவாக, இருதயம் தொடர்பான சிக்கல்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, இதனைத் தவிர்க்க தினையை உட்கொள்ள வேண்டும். இதில், நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது.
தினையில் பல நன்மைகள் உள்ளன. எனினும், இதன் அதிகப்படியான உட்கொள்ளல் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். தினையின் அதிகபடியான உட்கொள்ளல் தைராய்டு மற்றும் கோயிட்ரை விளைவிக்கிறது. ஏனெனில் தினையில் அயோடினை உறிஞ்சும் சில பொருட்கள் உள்ளன. தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் தினை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தைராய்டு பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
Input & image courtesy:Logintohealth