கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி இந்த பழத்திற்கு உண்டாம் !

Heathy Nutrients benefits ans side effect of pineapple.

Update: 2021-09-22 00:57 GMT

அன்னாசிப்பழம் மிகவும் சுவையான பழமாகும்.பெரும்பாலும் இது கோடைகாலத்தில் உண்ணப்படுகின்றது. இதில் எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன; அன்னாசிப்பழம் கோடை காலத்தின் வெப்பமான காலநிலையிலிருந்து உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அன்னாசி பழம் என்பது சளி மற்றும் இருமலைத் தடுக்க உதவும் ஒரு பழமாகும். அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சளி மற்றும் இருமலை நீக்குகிறது. 


அன்னாசிப்பழத்தின் உட்கொள்ளல் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது இதயத்தை பாதுகாக்கிறது. எலும்புகள் தொடர்பான வியாதிகள் மிகவும் வேதனை தரும் நோயாக பார்க்கப்படுகிறது. இந்த சிக்கலைத் தவிர்க்க அன்னாசிப்பழத்தை தினசரி உட்கொள்ள வேண்டும். அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் மூட்டுவலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது. அன்னாசிப் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி மேலே கூறப்பட்டது. இருந்தாலும், சில சமயங்களில் அன்னாசிப்பழத்தின் உட்கொள்ளல் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


அவை அன்னாசிப்பழத்தின் அதிகபடியான நுகர்வு வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கிறது. அன்னாசிப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் C இருப்பதே இதற்குக் காரணமாகும். பச்சை அன்னாசிப்பழம் சாப்பிடுவது அல்லது பச்சை அன்னாசி பழச்சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். இது உடலில் நச்சுகளை உருவாக்குகிறது. இதன் விளைவாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. தூக்கமின்மையைப் போக்க மருந்துகளை உட்கொள்பவர்கள், குறைந்த அளவிலேயே அன்னாசிப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் விளைவாக தோல் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள் இதை உட்கொள்ளக்கூடாது.  

Input & Image courtesy:Logintohealth

 


Tags:    

Similar News