உத்திரபிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த அதிவேக 'நமோ பாரத்' ரயில் சேவை!

உத்திர பிரதேசத்தில் பிரதமர் மோடி அதிவேக ரயிலான நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-21 11:30 GMT

உத்திரபிரதேச மாநிலம் சாகிபாபாத்தில் சாகிபாபாத் - துகாய் டிப்போ இடையிலான நாட்டின் முதல் பிராந்திய விரைவுரயில் சேவை நமோபாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும் இந்த ரயில் சேவை தொடக்க விழாவில் அவர் பேசியதாவது :-


இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுரெயில் சேவையான நமோ பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படும் இந்த நேரம் ஒரு வரலாற்று தருணம் ஆகும். புதிய தீர்மானங்களுடன் புதிய இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுவதாக இந்த நவீன ரயில் சேவை இருக்கும். நான்காண்டுகளுக்கு முன்பு நான் டெல்லி- காஜியாபாத், மீரட் பிராந்திய வழித்தட திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினேன். அந்த வழித்தடத்தில் தற்போது சாகிபாபாத் துகாய் இடையில் நமோபாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளேன்.


இந்த 82 கிலோமீட்டர் வழித்தட பணி முழுமையாக நிறைவு பெறும்போது அதையும் நானே திறந்து வைப்பேன். உத்திரபிரதேசம் அரியானா ராஜஸ்தான் மாநிலங்களில் மேலும் பல நகரங்களிடையே இந்த சேவை தொடங்கப்படும். அம்ரித் பாரத், வந்தே பாரத், நமோ பாரத் இந்த மூன்று ரயில்களும் இந்த பத்தாண்டு காலம் முடிவில் நவீன ரயில் அடையாளமாக இருக்கும். பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. ககன்யான் திட்டத்தில்  விரைவில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவிருக்கிறோம். விண்வெளி ஆய்வு நிலையத்தையும் அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News