கடன் செயலிக்கு கட்டுப்பாடுகள்: RBI மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

ஸ்மார்ட் போன் கடன் செயலிகள் கட்டுப்பாட்டிற்கு RBI மற்றும் மத்திய அரசிற்கு ஐகோர்ட் நோட்டீஸ்.

Update: 2022-11-09 06:19 GMT

நிதி சார்ந்த குற்றங்கள் அதிகரிப்பதாக தொடர்ந்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் மூலமாக கடன் செயல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிற்கு நீதிமன்றம் தற்பொழுது உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றே தாக்கல் செய்து இருக்கிறார்..


குறிப்பாக பிரதமர் தெரிவித்ததை போல தற்போது நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தற்போது வங்கியில் அல்லாத நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்பெல்லாம் வங்கிக்கு நீரில் சென்று விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து ஆவணங்கள் சமர்ப்பித்து,பலமுறை அலைய கடன் பெற வேண்டும். ஆனால் தற்போது நமது ஸ்மார்ட்போன் மூலமாக விரைவாக கடன் பெற முடிகிறது.


சமீபகாலமாக பல்வேறு நிதி நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் செயல்களை உருவாக்கி அதன் மூலம் கடன் வழங்கி வருகின்றனர். இந்த செயல்கள் மூலம் கடன் வழங்குவதை நம்பி பலர் தங்களுடைய பணத்தை சொத்தை இழந்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இவர் பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் போன்றவர்கள் குறிவைத்த இதுபோன்று கடன் செயல்கள் மோசடியில் ஈடுபடுகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்று கூறியமான தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News