கோவில் நிலங்களை மற்ற துறைகளுக்கு மாற்றும் தமிழக அரசு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு என்ன?

கோவிலில் தொடர்புடைய நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்றுவதற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Update: 2022-06-24 01:49 GMT

கோவில் நிலங்களுக்கு தொடர்புடைய எந்த ஒரு நிலத்தையும் மற்றொரு துறைகளுக்கு மாற்றுவதை தடைவிதித்து மற்றும் இனிமேல் மாற்றக் கூடாது என்று சென்னையை சேர்ந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்னை நீலாங்கரை உள்ள சக்தி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் ஆனது தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல் 1969ஆம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது. கோவிலில் நிலம் மற்றொரு துறைக்கு மாற்றப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 



மேலும் கோவில் நிலங்களில் தற்போது மீன்களை பராமரிக்கும் ஐஸ் தொட்டிகள் மற்றும் சில சிறிய ஐஸ் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. அதே போல சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் மற்றும் 15 சென்ட் நிலம் 2018ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகிகள் சார்பிலும் பக்தர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



மேலும் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மகாதேவன் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிலங்களை கோவில் சம்பந்தப்பட்ட துறை அல்லாத மற்ற துறைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று அரசின் உத்தரவை ரத்து செய்து 2020ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் தற்போது மீண்டும் கோவில் நிலங்களை அரசு மற்ற துறைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News