ஹிஜாப் விவகாரம்: உள்நாட்டு விஷயத்தில் தலையிடும் அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்!

மத விஷயங்களில் தலையிடக்கூடாது, பெண்கள் அணியும் ஆடையை தடை செய்வது ஏற்க முடியாது என்ற கருத்தை பதிவிட்டிருந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஹிஜாப் பற்றி உள்நோக்கம் கொண்ட கருத்துகளை கூறவேண்டாம். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு கருத்துகள் ஏற்கப்படாது.;

Update: 2022-02-12 11:50 GMT

கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருகை புரிந்தனர். இது போன்ற உடையை தவிர்த்து சீருடையில் வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் அதிரடியான கருத்தை தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு மற்ற முஸ்லிம் மாணவிகளும் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனை பார்த்து கொதித்த இந்து மாணவ, மாணவிகளும் காவித்துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிய உரிமை என்றால் காவித்துண்டை அணிந்து வருவதற்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதித்தற்கு சர்வதேச மத சுதந்திரம் என்ற அமெரிக்க அலுவலகம் கருத்து கூறியிருந்தது. மத விஷயங்களில் தலையிடக்கூடாது, பெண்கள் அணியும் ஆடையை தடை செய்வது ஏற்க முடியாது என்ற கருத்தை பதிவிட்டிருந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்று வரும் சம்பவம் நீதிமன்றத்தில் இருக்கிறது. ஹிஜாப் பற்றி உள்நோக்கம் கொண்ட கருத்துகளை கூறவேண்டாம். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு கருத்துகள் ஏற்கப்படாது. இவ்வாறு இந்தியா சார்பில் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: Krishi Jagran

Tags:    

Similar News