மயிலாடுதுறையில் தேசியக்கொடி வர்ணம் பூச எதிர்ப்பு தெரிவிக்கும் இஸ்லாமியர்கள் - களத்தில் இறங்கிய இந்து முன்னணி

மயிலாடுதுறை மணிக்கூண்டு தேசியக் கொடியில் வண்ணத்தை பூசுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு இந்து முன்னணி சார்பில் போராட்டம்.

Update: 2022-08-12 02:12 GMT

இந்தியா தற்போது சுதந்திர தினத்தில் 75வது அமுத விழாவில் சிறப்பாக கொண்டாடி கொண்டு வருகின்றது இந்த விழாவின் சிறப்பாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அனைவரும் தங்களுடைய வீடுகளில் இந்திய தேசியக்கொடி ஏற்றி தங்களுடைய நாட்டுப்பற்று உணர்வில் வெளிப்படுத்துமாறு மத்திய அரசாங்கம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இவற்றை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு வகையில் ஏற்பாடுகளை செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். 


தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் தமிழக பா.ஜ.க தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் பல்வேறு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய தேசப்பற்றை ஊக்குவிப்பதற்கும் தேசியக் கொடியின் சிறப்பை எடுத்துக்கூறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறையில் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மணிக்கூண்டு. மூவர்ணம் பூச முஸ்லீம்கள் எதிர்ப்பு, மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றான மணிகூண்டினை தேசியக் கொடி மக்கள் இயக்கத்தின் சார்பில் மூவர்ண நிறம் தீட்ட நகராட்சி அனுமதி பெறப்பட்டது. 


முஸ்லீம்கள் எதிர்ப்பால் தற்போது அனுமதிக்க முடியாது என்று நகராட்சி கூறுகிறது. இந்துமுன்னணி சார்பில் மூவர்ணம் தீட்டும் போராட்டம் அறிவிப்பு என்ற முடிவு செய்துள்ளது. மக்களுக்கு பொதுவான இடங்களில் தேசியக்கொடியின வர்ணத்தை பூசுவதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நோக்கத்திற்காகத் தான் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பதை அனைத்து இந்திய குடிமக்களும் உணர்வை வேண்டிய தருணம் இது. 

Input & Image courtesy: Hindu Munnani News

Tags:    

Similar News