வங்கதேசத்தில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய இந்துக்கள் !
வங்க தேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையில் சில செய்திகள் பரப்பப்பட்டது. இந்த சம்வத்தால் இந்துக்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் வங்கதேசத்தில் உள்ள அப்பாவி இந்துக்கள் மீது முஸ்லீம் கும்பல் கொலைவெறி தாக்குதலை தொடர்ந்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இந்துக்களின் கோயில்கள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டது. அதுவும் துர்கா பூஜையின்போது கலவரத்தை திட்டமிட்டு முஸ்லீம்கள் நடத்தி வந்தனர். இதனை கண்டிக்கும் விதமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அதே போன்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு பிரதமர் ஹசீனா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த வன்முறை தொடர்பாக இக்பால் உசேன் என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அதே போன்று இன்று மற்றொரு நபர் டாக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar