இந்துக்களை தாக்கி கோயில் சூறையாடல் - இந்திய தூதரகம் கண்டனம்!

இங்கிலாந்தில் இந்துக்களை தாக்கி கோவில்களை சூறையாடிய சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம்.

Update: 2022-09-21 00:42 GMT

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லீசெஸ்டர் நகரில் வசித்து வரும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது நேற்று வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த நகரில் உள்ள கோவில்கள் உட்பட இந்து சமூகத்திற்கு சொந்தமான பல்வேறு வளாகங்கள் சூறையாடப் பட்டதாகவும் கூறப்படுகிறது.


கடந்த சில மாதங்களாகவே வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்க நிலையில் இன்று இங்கிலாந்திலும் இத்தகைய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இங்கிலாந்து அதிகாரிகளை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


கடந்த மாதம் இறுதியில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து இருதரப்பு ரசிகர்கள் மோதிக்கொண்ட தேதியில், இருந்து லீ செஸ்டர் நகரில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும் அங்கிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த செயலுக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News