புத்தாண்டு நள்ளிரவில் கோவிலை திறப்பது ஆகம விதிமுறைகளுக்கு எதிரானது - களத்தில் இறங்கிய விஷ்வ ஹிந்து பரிஷத்

புத்தாண்டு நள்ளிரவில் கோவிலை திறப்பது ஆகம விதிமுறைகளுக்கு எதிரானது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

Update: 2022-12-29 00:59 GMT

கோவையில் ஆகம விதி முறைகளுக்கு எதிராக வரும் ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் கோவில் திறப்பதை தடை செய்யக்கோரி கோவை மாவட்டம் நிர்வாகத்திடம் விஷ்வ இந்து பரிசத் மனு கொடுத்து இருக்கிறது. விஷ்வ இந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் இணை அமைப்பாளர் திருஞான சம்பந்தம் கோவை கலெக்டரிடம் தற்போது மனு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.


அ தாவது ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் 12 மணியளவில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு இந்து சமயத்திற்கு எதிரானது. மேலும் கோவில் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது. அவற்றை மீறும் செயலாகவே இது பார்க்கப்படுகிறது.


நம்முடைய பண்பாட்டுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கோவில்களில் ஆகம விதிமுறைகளுக்கு விரோதமாக செயல்படுவது. நம்முடைய பண்பாட்டு ஜெபிக்கும் நோக்கில் நள்ளிரவில் கோவில்களை திறந்து சிறப்பு பூஜை செய்வது தமிழ் பண்பாட்டை சீர்குலைப்பு ஆகும். ஆங்கில புத்தாண்டு ஒட்டி இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நள்ளிரவில் திறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News