கோவில் வளாகத்தில் அத்துமீறி திமுக நிகழ்ச்சியா.. இந்து முன்னணி கண்டனம்..

கோவில் வளாகத்தில் அத்துமீறி திமுக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக இந்து முன்னணி கண்டனம்.

Update: 2023-06-10 03:13 GMT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் நாள், தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவர்க்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது என பல்வேறு வகையான விளம்பர பேச்சுக்களை தெரிவித்து ஒரு மாதத்திற்கும் மேலாக திமுக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை கட்சி தொண்டர்கள் முதல் கழக கண்மணிகள் வரை ஏற்பாடு செய்திருந்தார்கள்.



தற்போது பிறந்தநாள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் திமுக தலைவரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று ஒரு துடிப்பில் கோவிலுக்குள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததாக இந்து முன்னணி குற்றம் சாட்டி இருக்கிறது. கோவில் வளாகத்திற்குள் எப்படி நீங்கள் அரச நிகழ்ச்சிகளை நடத்தலாம்? என்று பல்வேறு விதமான கேள்விகளையும் இந்து முன்னணி சார்பில் கேட்கப்பட்டு இருக்கிறது.


இது தொடர்பான ட்விட்டர் பதிவில் அவர்கள் கூறும் பொழுது, "கோவில் வளாகத்தில் அத்துமீறி திமுக நிகழ்ச்சி சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து கபடி போட்டி கோவில் வளாகத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கோவில் வளாகத்துக்குள் அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது" என பதிவிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News