கோவில் நில ஆக்கிரமிப்பு பற்றி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் - உயர் நீதிமன்றம் கேள்வி?

கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பு இருக்கிறது.

Update: 2022-12-11 13:06 GMT

சென்னை திருத்தொண்டர் நிறுவினர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனைவி கரூரில் உள்ள கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் வணிக வளங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கோவில் நடத்தை ஆக்கிரமிப்பு கட்டிடம் உள்ள வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கவும், அங்குள்ள வீடுகளின் குடியிருப்பு அவர்களிடம் இந்த நிலத்தை கோவிலுக்கு சொந்தமானது என கோவில் நிர்வாகத்துடன் உறுதிமொழி பத்திரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த சுப்ரீம் கோர்ட் தங்களது கோரிக்கையை குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடலாம் என்று வழக்கை முடித்து வைத்தது இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் விசாரணை புது உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக கரூர் கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோவில் நிலங்கள் ஆக்கிரமித்தவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்.


பின்னர் அவர்களை ஆவணங்களின் சமர்ப்பிக்க போதி அவகாசம் கொடுக்க வேண்டும். கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பு உறுதியானால், ஆக்கிரமிப்பு 12 வாரங்களுக்குள் அகற்று வேண்டும் என்று என்றும் கோவில் நிலங்களில் ஆக்கிரம்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஹகோர்ட் பல ஆண்டுகளாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இதை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News