சேலம்: அர்ச்சகர் பணிநீக்கம் செய்தது குறித்து அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவு?

அர்ச்சகர் சஸ்பென்ட் செய்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்.

Update: 2022-05-15 02:24 GMT

சேலம் மாவட்டத்தில் கோவில் அர்ச்சகரை திடீரென்று சஸ்பென்ட் செய்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் சம் இந்து சமய அறநிலையத்துறை உடனே பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம், அம்மாப்பேட்டை கிருஷ்ணா நகரில், சீதா ராமச்சந்திரமூர்த்தி கோவில் உள்ளது. இங்கு அர்ச்சகராக பணியாற்றிய கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று ஆண்டுகளாக, எனக்கு சம்பளம் தரப்படவில்லை. கோவிலுக்கு நிர்வாக அதிகாரி யாரும் நியமிக்கப்படவில்லை.


குறிப்பிட்ட எந்த உத்தரவும் இன்றி, கோவில் நிர்வாகத்தை, தக்கார் மேற்கொள்கிறார். மேலும் 40 ஆவது வாரத்தில் கவுன்சிலராக உள்ள மஞ்சுளா ராஜமோகன் என்பவரை நைட்டி உடன் கோவிலுக்கு அவர் வந்த காரணத்திற்காக அவரை நான் கோவிலுக்கு வர அனுமதிக்கவில்லை அதற்காகவே எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த அவர், என்னை திட்டினார்; அச்சுறுத்தினார். தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் வரவே, நான் மன உளைச்சல் அடைந்தேன்.


மேலும் இது குறித்து சமூக வலைதளங்களில் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் அவரின் ஆதரவாளரான 60 பேர் கொண்ட கும்பல் கோவிலுக்குள் நுழைந்து அலுவலரை தாக்கும உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து கோவில் நிர்வாகம் பறிக்கப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில் தற்போது இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Input & Image courtesy:Dinamalar News

Tags:    

Similar News