கிறிஸ்துவத்திற்கு மாறாதவர்கள் மாட்டிறைச்சி உண்ணுவது கட்டாயம்: மிஷனரிகள் அட்டூழியம்!
கிறிஸ்துவ மதத்திற்கு வாருங்கள், இல்லையேல் மாட்டிறைச்சி உண்ணும்படி கட்டாயப்படுத்தும் மிஷினரிகள்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டம், பல ஆண்டுகளாக கிறிஸ்தவ மிஷனரிகளால் பரவலான மத மாற்றத்தைக் கண்டது. குறிப்பாக இந்த நோய் தொற்று காலத்தில் இந்த மிஷினரிகளின் ஏழை எளிய மக்களை தங்களுடைய மத மாற்ற நோக்கத்திற்காக முற்றிலும் பயன்படுத்தி உள்ளார்கள். மேலும் கும்லா மாவட்டத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள கடோலி தொகுதியில் வசிக்கும், பாதிக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு குடும்பம் இதுபற்றிய தகவல் செய்தியை OPINDIA வெளியிட்டுள்ளது.
அதில் பாதிக்குக் குறைவானவர்கள் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் தங்களது மதத்தை விட்டுக் கொடுத்து கிறிஸ்தவத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கிறிஸ்தவ மிஷனரிகளின் உத்தரவின் பேரில் அப்பகுதியில் மதமாற்ற கும்பல்களின் பயங்கரம் காரணமாகவும் இந்த செயல்களை செய்ததாக அங்குள்ள உள்ளூர் மக்கள் தகவல்களை தெரிவித்து உள்ளனர். கிராமத்தில் மொத்தமாக வசிக்கும் 55 குடும்பங்களில் 30 குடும்பம் ஏற்கனவே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அந்த கிராமத்தில் வசிக்கும் சாலிக் கோப் என்ற நபரின் குடும்பம் ஒன்று கடந்த 6 மாதங்களாக மத மாற்ற கோரிக்கையை ஏற்காததால், கிறிஸ்தவ கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை கட்டாயப்படுத்தவும், பொது இடங்களில் அவர்களை அனுமதிப்பது தடுக்கவும் மிஷனரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கிராமத்தில் விவசாயம் செய்வதும் பொது கிணற்றில் தண்ணீர் எடுப்பதும் தடை செய்ததாக கூறப்படுகிறது. எனவே கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் அதிகமுள்ள இக்கிராமத்தில் மக்கள் மிகவும் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Opindia