இந்தப் பிரச்சினை இருக்கும்போது, சில உணவுகளை மறந்தும் சாப்பிடக்கூடாது!
Not eat certain food against eczema
அரிக்கும் தோல் அலர்ஜி போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும். சருமத்தை பாதிக்கும் பெரும்பாலான மருத்துவ நிலைமைகளைப் போலவே, அரிக்கும் தோலழற்சி பிரச்சினையானது அரிப்பு, கொப்புளங்கள், தடிப்புகள் மற்றும் வறட்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் சிக்கல் மேலும் அதிகமாகக்கூடும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லதாக இருக்கும்.
சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் அழற்சி ஏற்படலாம். அழற்சி ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சோடாக்கள், கேக்குகள், எனர்ஜி பானங்கள் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற அதிக சர்க்கரைச் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அரிப்பு போன்ற சமயங்களில் உலர் பருப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது. பருப்பு வகைகளில் T செல்கள் மற்றும் இம்யூனோகுளோபுலின்-E ஆகியவற்றின் வெளியீட்டைத் தூண்டுகின்றன. இவை இரண்டும் வீக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. எனவே, வேர்க்கடலை, முந்திரி, பாதாம் அல்லது அக்ரூட் பருப்புகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தோல் அலர்ஜி பிரச்சினை ஏற்பட்டால் முட்டைகளை உணவில் சேர்ந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது அழற்சி பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். பால் ஒரு பொதுவான ஒவ்வாமை பொருளாகும். இது அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கான அறிகுறிகளைத் தூண்டும். பால் குழந்தைகளில் தோலழற்சி ஏற்படுத்தக்கூடியது. எனவே பெரும்பாலான குழந்தைகள் பால் குடிப்பதால், அவர்களுக்கு பால் ஒவ்வாமை ஏற்படக்கூடும்.
Source from: https://greatist.com/health/eczema-டயட்
Image courtesy: Wikipedia