ஓரை அறிந்து செயல்பட்டால் உங்களை யாராலும் ஜெயிக்க முடியாதாம்!
ஓரை அறிந்து நீங்கள் நடந்து கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது.
ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் குறிப்பாக ஏழு கிரகங்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துகின்றன. மேலும் இந்த கிரகங்களின் ஆதிக்கத்தை குறிப்பிடுவது ஓரை என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த ஓரைகளில் நீங்கள் எந்த செயலை செய்தால் நீங்கள் சிறப்பாக வளர்ச்சியடையும் முடியும் எந்த கிரகங்கள் எந்த ஓரையை தவிர்ப்பது நல்லது? என்பதை பார்ப்போம். மேலும் இந்த ஊரின் படி ஒருவர் தன்னுடைய செயல்களை தொடங்கினால் அவர்களுடைய வெற்றிகளை யாராலும் தடுக்க முடியாது என்றும் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய ஓரைகள் சுப ஓரைகள் என்றும் சூரியன் சனி, செவ்வாய் போன்றவை அசுப ஓரைகள் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நல்ல காரியங்களை நீங்கள் சுப காரியங்களைச் செய்யலாம். மேலும் நீங்கள் செய்யப்போகும் நல்ல காரியங்களில் சுப ஓரைகள் இடம் பெறுகிறதா? என்பதை பார்த்து வழி நடப்பது நல்ல பலனைக் கொடுக்கும். சந்திர ஓரை நண்பர்களுக்கு நல்ல வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் ஒரு நண்பரைச் சந்திக்கச் செல்லும் பொழுது சந்திர ஓரையில் நீங்கள் பயணத்தை மேற்கொள்வது செயல்களில் நல்ல முடிவை கொடுக்கும். மேலும் உங்கள் நண்பரின் நட்பு நீண்ட காலம் நீடிக்கும்.
குரு ஓரையில் நீங்கள் ஒரு புதிய செயலை அல்லது புதிய தொழில் தொடங்கும் பொழுது இந்த உரையில் தொடங்கலாம். மேலும் இது உங்களுக்கு அனைத்து வெற்றிகளையும் கொடுக்கும். சூரிய ஓரை காலங்களில் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சுக்கிர ஓரை என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். எனவே இந்த காலங்களில் நீங்கள் எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அது பன்மடங்கு அதிகரிக்கும்.
Input & Image courtesy: Twitter Post