கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் !

How to control our bad cholesterol?

Update: 2021-08-24 00:32 GMT

உடல் உள்ள கெட்ட கொழுப்புகள் மனிதனுக்கு பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக வியாதிகளுக்கு முதல் விஷயமாக கெட்ட கொழுப்பு மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே அதை குறைப்பதற்கான வழிகள் தற்போது பார்க்கலாம். நீரேற்றத்துடன் இருப்பது எடை இழப்புக்கு மிகவும் முக்கியமாகும். எடை இழப்பில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் கார்டியோ அல்லது வேறு ஏதேனும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடையை உங்களால் குறைக்க முடியும். ஓட்டம், நடனம், நடைபயிற்சி, நீச்சல் அல்லது உங்கள் இதயத் துடிப்பை அதிகமாக வைத்திருக்கும் பல விதமான உடற்பயிற்சிகளை நீங்கள் அன்றாடம் செய்யலாம்.  


நாம் அனைவரும் சில நல்ல குக்கீகள், மிருதுவான சிப்ஸ் மற்றும் சுவையான பாஸ்தா போன்றவற்றை விரும்வி சாப்பிடுவோம். இருப்பினும், இதிலிருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் கலோரிகள் உங்க உடல் எடையை அதிகரிக்கக்கூடும். எனவே அவை முகம் உட்பட உடலில் அதிகப்படியான எடை அதிகரிப்பு மற்றும் கொழுப்பு சேமிப்புக்கு வழிவகுக்கும். எனவே அவற்றை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.bசோடியம் உங்கள் உடலில் நீரை தங்கி விடச்செய்கிறது. இதன் விளைவாக முகம் உட்பட உடலில் வீக்கம் ஏற்படுகிறது. எனவே, அதிகப்படியான சோடியம் உபயோகத்தைத் தடுக்க ஊறுகாய் மற்றும் குறிப்பாக அதிக உப்பு உபயோகிக்கும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.


தூக்கமின்மை மன அழுத்தம், எடை அதிகரிப்பு, அதிகரித்த பசியை தூண்டுகிறது. எனவே ஆரோக்கியமான எடை வரம்பை அடைய நல்ல தரமான தூக்கம் மிக முக்கியமானது. அதிக நார்ச்சத்து உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலை நிறைவாக வைத்து பசியை குறைக்கிறது. எனவே கோதுமை உட்பட, பலவகை தானியங்கள், பச்சை இலை காய்கறிகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை ஒட்டுமொத்த உடல் எடையை குறைக்க உதவும்.

Input:https://what_are_good and _bad_fats/article.htm

Image courtesy:wikipedia


Tags:    

Similar News