அதிகப்படியான தொழில்நுட்ப பயன்பாட்டினால் இது அதிகமாக ஏற்படுகிறதா?
How to prevent dark circles.
தற்போதைய சூழலில், மக்கள் முக அழகையே பெரிதும் போற்றுகின்றனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களின் கண்களை சுற்றி கருவளையங்கள் உண்டாகும் போது, அவர்களின் அழகு குறைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். பெரும்பாலும் கருவளையங்கள் இளைஞர்களின் மன விரக்திக்கு வழிவகுக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது போதுமான தூக்கம் இல்லாததால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படுகின்றது. முகத்தை பராமரிக்காமல் இருப்பது மற்றும் மனச்சோர்வு போன்றவையும் கருவளையங்கள் உண்டாவதற்கான காரணமாக அமைகின்றன. கருவளையங்கள் என்பது கண்களை சுற்றியுள்ள தோலில் உண்டாகும் கருதிட்டுகளாகும். இவை ஒரு நபரின் தோற்றத்தை சோர்வாகவும், பதற்றமாகவும் ஆக்குகிறது.
பொதுவாக, கருவளையங்கள் வயது அதிகரிப்பதன் காரணமாக ஏற்படுகின்றது. தற்போதைய சூழலில், போதுமான தூக்கம் இல்லாதது அல்லது மொபைல்கள் மற்றும் கணினிகளின் அதிகப்படியான பயன்பாடு கருவளையங்களுக்கு வழிவகுக்கிறது. மரபணு காரணங்களால் சிலருக்கு கருவளையங்கள் உருவாகின்றன. வயது அதிகரிப்பதன் காரணமாகவும் கருவளையங்கள் தோன்றுகிறது. ஒரு நபரின் வயது அதிகரிக்கும் போது, அவரின் தோல் மெல்லியதாகிறது, இதன் காரணமாக இரத்த நாளங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. தூக்கம் பற்றாக்குறை கருவளையங்ளுக்கான மிகவும் பொதுவான காரணமாகும்.
உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் கண்களின் கீழ் கருவளையங்களை ஏற்படுத்துகிறது. சோர்வு கண்களின் கீழ் கருவளையங்களை ஏற்படுத்துகிறது. ஒப்பனை பொருள்களை அதிகமாக பயன்படுத்துவது கருவளையங்களுக்கு வழிவகுக்கிறது. கருவளையங்களைக் குறைக்க தீவிர ஒளி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கண்களின் கீழ் தேங்கியுள்ள கொழுப்பை அகற்ற லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின் பின்னர், தோல் நிறம் இலகுவாகிறது. கடுமையான நிலைகளில், கருவளையங்கள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகின்றன. இது கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் மற்றும் இருளைக் குறைக்கிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கருவளையங்களைத் தடுக்க தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். தினசரி யோகா செய்வது கருவளையங்களைத் தடுக்கிறது. கருவளையங்களைத் தடுக்க ஒரு சீரான உணவு பழக்கம் பயனுள்ளதாக அமைகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். இரவில் நீண்ட நேரம் TV, மொபைல் அல்லது கணினியைப் பார்க்க வேண்டாம்.
Input & Image courtesy:Logintohealth