"படேல் சிலை உயிரற்ற சிலை. தமிழகத்தில் உள்ள பல நூற்றூக்கணக்கான ஈ.வெ.ரா சிலைகள் உயிருள்ள சிலைகளா?" கனிமொழிக்கு ஹெச்.ராஜா சரமாரி கேள்வி!

"படேல் சிலை உயிரற்ற சிலை. தமிழகத்தில் உள்ள பல நூற்றூக்கணக்கான ஈ.வெ.ரா சிலைகள் உயிருள்ள சிலைகளா?" கனிமொழிக்கு ஹெச்.ராஜா சரமாரி கேள்வி!

Update: 2018-12-03 02:26 GMT

உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம் … கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வெறும் 350 கோடி தானாம் !! கனிமொழி கடும் தாக்கு !!


வங்க கடலில் உருவான  கஜா புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பேரழிவு ஏற்பட்டது.  புயல்-மழைக்கு 63 பேர் பலியாகினர்.
இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், "உயிரற்றபட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும்  கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்!" என பதிவிட்டு இருந்தார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1069218913303580674?s=20
இதற்கு தற்போது பதிலளித்துள்ள பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா "குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா" என தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/HRajaBJP/status/1069406147067600897?s=20

Similar News