நெல்லை மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சர்ச் கட்ட தாரைவார்த்த செயல் அலுவலர் இந்து முன்னணியின் கடும் எதிர்ப்புக்குப் பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவர்களின் தீவிர மதமாற்ற செயல்பாடுகளால் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேலுச்சாமி என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு அறநிலையத் துறை செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். அந்த கால கட்டத்தில் கோவில் சொத்துக்களை கிறிஸ்தவர்கள் சட்ட விரோதமாக அனுபவிக்க அனுமதித்ததாக இவர் மீது புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை கீரனூர் பகவதி அம்மன் கோவிலில் பணி புரிந்து வந்தார். வள்ளியூர் முருகன் கோவில் சுபாஷினி என்ற அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாக செயல்பட்டு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட தனியார் கனிம நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு கோவில் சொத்துக்களை மீட்டார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்து வந்தார்.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முறைகேடு ஆசாமி வேலுச்சாமி விருப்ப இடத்திற்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் முறைகேடு புகாரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட வள்ளியூர் முருகன் கோவிலுக்கே மீண்டும் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சபாநாயகர் அப்பாவும் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக முக்கிய புள்ளிகளின் உதவியுடன் வேலுச்சாமி கோவில் நிலங்களை கிறிஸ்தவர்களுக்கு தாரைவார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.