அமெரிக்காவை சுருட்டி எடுத்த ஐடா சூறாவளி ! வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பல மாகாணங்களில் புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2021-09-03 03:58 GMT

அமெரிக்காவில் பல மாகாணங்களில் புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் ஐடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு நகரங்களில் வீதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய 5வது சக்தி வாய்ந்த சூறாவளியாக ஐடா கருதப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Source, Image Courtesy: Dailythanathi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/03050301/At-Least-42-Dead-As-Hurricane-Ida-Brings-Flash-Flooding.vpf

Tags:    

Similar News