ஊழல்வாதிகளின் கூட்டணி கட்சியை கண்டு ஒருபோதும் பயப்பட மாட்டேன்- பிரதமர் மோடி!

ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளனர்.அந்த கூட்டணி கட்சியை கண்டு பயப்பட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-04-02 17:08 GMT

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய மோடி பேசியதாவது :-

2014 -19 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீரட் நகரில் இருந்து துவக்குகிறேன். 2024-லும் முதல் பிரச்சாரத்தை மீரட் நகரில் இருந்து தான் துவக்குகிறேன் .இந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டுமல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல். உலக அளவில் பதினோராவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தபோது நாட்டில் வறுமை அதிகரித்தது. ஆனால் ஐந்தாவது இடத்திற்கு வந்த போது 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறினர்.

மூன்றாவது இடத்திற்கு வரும்போது வறுமை முற்றிலும் அகற்றப்படுவதுடன் அதிகாரம் பெற்ற மத்திய தர வர்க்கத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பார்கள். தற்போது வரை வளர்ச்சிக்கான ட்ரெய்லரை மட்டும்தான் பார்த்து உள்ளீர்கள் .நாட்டை இன்னும் முன்னேற்றபப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். தே.ஜ கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மக்கள் முன்பு உள்ளது. மூன்றாவது முறை ஆட்சி அமைக்க பாஜ அரசு தயாராக உள்ளது .

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. முன்னர் சாத்தியம் இல்லாமல் இருந்த ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து ராமரை வழிபடுகின்றன. அதேபோல் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது கற்பனையானது .தற்போது அச்சட்டம் நீக்கப்பட்டதால் மாநில வளர்ச்சி பெற்று வருகிறது.

இதனால் பாஜகவுக்கு 370 தொகுதிகள் என்று மக்கள் ஆசி வழங்கி வருகின்றனர். ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. அந்த கூட்டணியைக் கண்டு நான் துளியும் பயப்பட மாட்டேன். ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கி உள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


SOURCE :Dinaboomi

Similar News