உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன்!

Update: 2022-03-01 05:29 GMT

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்கு சிக்கத்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் முயற்சியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இப்பணிகளை உக்ரைனில் இருந்து செய்ய முடியாததால் அண்டை நாடுகளில் இந்திய அதிகாரிகள் முகாமிட்டு மாணவர்களையும், இந்தியர்களை மீட்டு வருகின்றனர்.

இதற்கு ஆபரேஷன் கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை பிரதமர் மோடி நேரடியாக கண்காணித்து மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். இது பற்றி அவ்வப்போது உயர்மட்ட குழு ஆலோசனை செய்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றார்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்கும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்பார்வையிட்டுள்ளார். இதற்கிடையில் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அது மட்டுமின்றி சிக்கித்தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Twiter

Tags:    

Similar News