'நாட்டில் வறுமையை ஒழிக்காமல் ஓயமாட்டேன்'- பீகார் மாநிலம் நவடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி!
நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்காமல் ஓயமாட்டேன். தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது :-
பீகாரில் முன்பு ஒரு காலத்தில் காட்டாட்சி நிலவியது. பெண்கள் வெளியே செல்லவே பயந்தனர். அந்த நிலையை நிதிஷ்குமார் சுசில்குமாரும் மோடியும் மாற்றிக் காட்டினர். தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று நிதிஷ்குமார் இங்கு பேசினார். நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. பிறகு ஏன் மோடி கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று சிலர் ஆச்சரியப்படுகின்றனர்.
நான் ஓய்வெடுக்கக்கூடிய ஆள் இல்லை. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன். எனது பத்தாண்டு கால ஆட்சி வெறும் ட்ரைலர் தான் .நமது வளர்ச்சி எந்திரம் ஒடுதளத்தில் தயாராக இருக்கிறது. விரைவில் மேலே எழும்பும் .மோடியின் உத்தரவாதம் பற்றி தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. என்னால் வாக்குறுதியை காப்பாற்ற முடிகிறது .அதனால் அளிக்கிறேன். அதற்கு தூய நோக்கமும் உறுதியான உறுதிப்பாடுமே காரணங்கள்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அது ஒரு திருப்திப்படுத்தும் பிரகடனம். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவி சாதாரணமானது அல்ல .அதில் இருப்பவர் ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் 370-வது பிரிவு நீக்கம் பற்றி பேசக்கூடாது என்கிறார். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ராஜஸ்தான் பீகார் உள்பட நாடு முழுவதும் உள்ள வீரர்கள் பலியாகி உள்ளனர் .அவர்களின் உடல்கள் மூவர்ணக் கொடி பொருத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன .
பெண்களுக்கு விரோதமான முத்தலாக் போன்ற பழக்கங்களுக்கு எதிராக இந்த அரசு துணிச்சலாக செயல்பட்டது. காங்கிரஸகூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை இழிவு படுத்துகின்றன இந்தியா கூட்டணியில் உட்புசல் நிலவுகிறது தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவிட்டால் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது என்று ஒரு மூத்த தலைவர் மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.